செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (12:45 IST)

கொதிக்கும் பால் பானைக்குள் குழந்தையை போட்டு கொடூர வேண்டுதல்! - அதிர்ச்சியளிக்கும் காசிதாஸ் பாபா பூஜை!

kasidas baba pooja

வட மாநிலத்தில் நடத்தப்படும் காசிதாஸ் பாபா பூஜை என்ற வேண்டுதல் நிகழ்வில் பச்சிளம் குழந்தையை கொதிக்கும் பால் பானைக்குள் பக்தர் ஒருவர் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இறை நம்பிக்கை அனைத்து தரப்பு மக்களிடையேயும் உள்ள நிலையில் சில பகுதிகளில் இறை நம்பிக்கையின் பேரால் நடத்தப்படும் மூர்க்கமான வழிபாட்டு முறைகள் அவ்வப்போது கேள்விகளுக்கு உள்ளாகின்றன. அந்த வகையில்தான் தற்போது காசிதாஸ் பாபா பூஜை என்ற சடங்கு வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

அந்த வீடியோவில் அடுப்பில் பானை நிறைய கொதிக்கும் பால் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்தர் தனது பச்சிளம் குழந்தையை எடுத்து சென்று அந்த பால் பானைக்குள் திணிக்க முயல்கிறார். குழந்தை கொதிக்கும் பால் காலில் பட்டு கதறி அழுகிறது. பின்னர் மீண்டும் குழந்தையை தூக்கி தன்னோடு வைத்துக் கொண்டு கொதிக்கும் அந்த பானையை ஒரு கையால் தூக்கி அந்த சூடான பாலை அப்படியே தன் மீதும், தன் குழந்தை மீதும் ஊற்றுகிறார். சூடு பொறுக்க முடியாமல் அந்த குழந்தை அலறியபடியே இருக்கிறது.

 

வட மாநிலங்களில் ஏதோ ஒரு பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த நிலையில், இது என்ன விதமான மூட நம்பிக்கை வேண்டுதல் என பலரும் கேள்வி எழுப்பி கண்டனமும் தெரிவித்திருந்தனர். அதில் ஒரு பயனர் இது உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் யாதவர்கள் இடையே இருக்கும் ஒரு விநோத வழிபாட்டு முறை என்றும், இதற்கு பெயர் காசிதாஸ் பாபா பூஜை என்றும் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K