திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (12:20 IST)

விடாமல் கடிக்கும் பாம்புகள்! சாகாமல் தப்பிக்கும் இளைஞர்! - ஒருவழியாக ரகசியத்தை கண்டுபிடித்த மருத்துவர்கள்!

Vikas dube

உத்தர பிரதேசத்தில் விகாஸ் துபே என்ற இளைஞரை பாம்புகள் வாரம்தோறும் கடித்து வந்த செய்திகள் வைரலான நிலையில், அந்த இளைஞரை மருத்துவர்கள் செய்த ஆய்வில் பாம்பு கடி குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பதேபூரை சேர்ந்த இளைஞர் விகாஸ் துபே. இவரை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆங்காங்கே பாம்புகள் கடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டிலிருக்காமல் தனது சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அவர் சென்றபோது அங்கும் பாம்புகள் அவரை கடித்துள்ளது.

வார இறுதி நாட்களில் தான் எங்கிருந்தாலும் பாம்புகள் தேடி வந்து கடிப்பதாக கூறும் அவர், இதுவரை தன்னை 7 முறை பாம்புகள் கடித்து விட்டதாகவும், 9வது முறை அது கடித்ததும் தான் இறந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் செய்யவும், மேற்கொண்டு பாம்பு அவரை கடிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்யவும் மருத்துவர்களுக்கு பதேபூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
 

அதன்படி, மருத்துவர்கள் விகாஸ் துபேவை பரிசோதித்ததில் அவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்தது தெரிய வந்துள்ளது. முதல் முறை பாம்பு கடித்ததற்கு சிகிச்சை எடுத்த அவர், அதன்பின்னர் ஒவ்வொரு வாரமும் தன்னை பாம்பு கடிப்பதாக கற்பனையாக நினைத்துக் கொண்டு அவ்வாறு கூறி வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு மனநல சிகிச்சைகள் அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K