செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2020 (14:41 IST)

10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை! – டெல்லியில் துவக்கம்!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் கொரோனா சிகிச்சைகளுக்காக 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஆறு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், தலைநகர் டெல்லி மாநில அளவிலான பாதிப்புகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் பாதிப்புகளை கட்டுப்படுத்த 10 ஆயிரம் படுக்கைகளை கொண்ட சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியுள்ளனர். டெல்லி ஹரியானா எல்லைப்பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையை இந்தோ-திபெத் எல்லை படையினர் கண்காணிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் லேசான கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களும், அறிகுறிகள் இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்போரும் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.