நாளை முதல் தாஜ்மஹாலுக்கு போகலாம்; ஆனா ரூல்ஸ் உண்டு! – மத்திய அரசு!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது புராதாண சின்னங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மெல்ல மெல்ல தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்ட தளர்வில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 820 மத தலங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தற்போது மேலும் பல வரலாற்று சின்னங்களையும், அருங்காட்சியகங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் தாஜ்மஹா, செங்கோட்டை உள்ளிட்ட நினைவு சின்னங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகின்றன. ஆனால் முன்னர் போல யார் வெண்டுமானாலும் சென்று புராதாண சின்னங்களை பார்வையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட புராதாண சின்னத்தை பார்வையிட செல்பவர்கள் முன்னதாகவே இ-பாஸ் பெற வேண்டும் என்றும், புராதண சின்னங்களை பார்வையிடும்போது மாஸ்க், கையுறை அணிவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.