மாஸ்க் அணியாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்! – அதிரடியாக இறங்கிய கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் காட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால்.
கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக உலகமே பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதலாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மீண்டு கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக டெல்லியில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் ரூ.500 ஆக இருந்த நிலையில் தற்போது அதை ரூ.2000 ஆக உயர்த்தி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ள அவர் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியுள்ளார்.