புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (11:15 IST)

பாட்டி உங்களுக்கு 1 கோடி பரிசு விழுந்திருக்கு… ஆனால் நீங்க 9 லட்சம் தாங்க – ஏமாற்றிய கும்பல்!

பெங்களூருவில் பாட்டி ஒருவரிடம்  9 லட்சம் ரூபாயை நூதனமாக மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.

பெங்களூரு வித்யாரண்யபுராவைச் சேர்ந்த பாட்டி ஒருவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த பெண் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உங்களுக்கு 25 லட்சரூபாய் பரிசு விழுந்துள்ளது என கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாய் என சொல்லியுள்ளார். இதைக்கேட்ட பாட்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் இந்த ஒரு கோடியை நீங்கள் பெற வேண்டுமானால் வருமான வரியை முன்னதாகவே கட்ட வேண்டும். அதனால் எனது வங்கிக் கணக்குக்கு 9.25 லட்சம் அனுப்புங்கள் என சொல்லியுள்ளார். அதை நம்பிய அந்த முதியவரும் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த பெண்ணிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பரிசு விழுந்தது பற்றி பாட்டி உறவினர்களிடம் சொன்ன பிறகுதான் தான் ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்துள்ளார்.