செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (16:54 IST)

டெல்லியில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு: முதல்வர் அறிவிப்பு

டெல்லியில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு:
கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க இன்று ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தால் போதாது என்றும் குறைந்தபட்சம் 10 நாட்கள் அல்லது 14 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இதனை அடுத்து பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 144 தடை உத்தரவை வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தி உள்ளன. மேற்கு வங்கத்திலும் கொல்கத்தா உள்பட 125 நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் டெல்லி,ம் மார்ச் 31ஆம் தேதி வரை முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இவ்வாறு தனித்தனியாக ஒவ்வொரு மாநிலமாக 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா பிரச்சனைக்கு ஒரே வழி மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதுதான் என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும் அதனை மக்களும் பொறுப்பை உணர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது