திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூன் 2022 (13:26 IST)

நடுவானில் தீப்பிடித்த ஸ்பைஸ்ஜெட் விமானம்! – பயணிகள் நிலை என்ன?

Spicejet
டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் பாட்னாவிலிருந்து 180 பயணிகளை ஏற்றிக் கொண்டு சில மணி நேரங்கள் முன்னதாக பாட்னாவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது.

பாட்னாவிலிருந்து புறப்பட்டு வானை அடைந்த சில மணி நேரங்களில் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக மீண்டும் பாட்னாவுக்கே திருப்பப்பட்ட விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. உடனே அதிலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்பட்டவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானத்தில் தீப்பிடிக்க காரணம் என்ன என்பது குறித்த விசாரணை மேற்கோள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாட்னாவிலிருந்து புறப்பட வேண்டிய, தரையிறங்க வேண்டிய பிற விமானங்களின் சேவை சில மணி நேரங்கள் தாமதமாகியுள்ளது.