1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (09:13 IST)

விமானத்தில் அமர்ந்த பிறகு ரத்து அறிவிப்பு: ‘ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு கண்டனம்!

spicejet
விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்த பிறகு அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளதால் பயணிகளுக்கு பெரும் ஆத்திரத்தை அளித்துள்ளது. 
 
மதுரையில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை கிளம்புவதாக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டு விமானத்தில் பயணத்திற்காக ஏறி உட்கார்ந்து இருந்தனர்.
 
இந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய் செல்லும் பயணிகள் விமானம் நிறுத்தப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்தது. ஏற்கனவே முதல் நாள் இந்த விமானம் இதே காரணத்துக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவது நாளாகவும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
அதுமட்டுமின்றி விமானத்தில் அமர்ந்த பிறகு ரத்து என்ற அறிவிப்பு வெளியானதால் விமான நிலைய ஊழியர்கள் உடன் பயணிகள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது