திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (11:39 IST)

அரை தூக்கத்தில் பேருந்து ஓட்டிய டிரைவர்! – விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் பலி!

accident
ஒடிசாவில் இருந்து ஆந்திரா சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சின்னப்பள்ளியில் இருந்து ஆந்திராவின் விஜயவாடாவிற்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்து அதிகாலை அல்லூர் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் தூங்கியதே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.