வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:56 IST)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரொனா தொற்று

delhi aiims
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவனை நிர்வாகம் அறிவுத்தல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10158 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 44 ஆயிரத்து 998 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில்,  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை  நிர்வாகம் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

*முக்கவசங்களை பணியிடங்களில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

* அடிக்கடி தொடக்கூடிய பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும்! அடிக்கடி சுகாதார விசயங்களைப் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

*இருமலின்பொஅது, மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகளை முழங்கை அல்லது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் மூடிக் கொள்ள வேண்டும்.

*தனி நபர் சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல்

*அலுவலகத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூட கூடாது.

உடல் நிலை சரியில்லை என்றால் அதிகாரிகளிடம் கூறி, வீட்டில் தங்களைத் தனிமைப்படுதிதிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.