செவ்வாய், 4 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:11 IST)

உக்ரைனில் மருத்துவ மாணவர்களுக்கு தகுதித்தேர்வு! இந்தியா வந்துள்ள உக்ரைன் அமைச்சர் அறிவிப்பு

உக்ரைன் நாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து மாணவர்கள் மருத்துவம்  படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரஷ்யா போர் காரணமாக நாடு திரும்பினர். அவர்கள் தங்கள் படிப்பை தொடர முடியாமல் இருக்கும் நிலையில் இந்தியா வந்துள்ள உக்ரைன் அமைச்சர் இதற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா உட்பட அனைத்து வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் நாடுகளில் மீண்டும் மருத்துவ படிப்பு படிக்க அதற்கு தகுதி தேர்வை எழுதி இணைந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள உக்ரைன் நாட்டின் வெளியேறுவதற்கு அமைச்சர் எமின் இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே உக்ரைன் நாட்டில் இருந்து மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த மாணவர்கள் இந்த தகுதி தேர்வை எழுதி மீண்டும் மருத்துவ படிப்பு படித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva