1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (13:05 IST)

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

assembly
தமிழ்நாடு அரசு, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கும் விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது. 2010 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் 2020 திருத்த சட்டத்தின் அடிப்படையில், முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். இது 1ஆம் வகுப்பு முதல் மேல் கல்வி வரையான தகுதிகளை உள்ளடக்குகிறது.
 
தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது என்பது, பிற மொழியில் படித்து தேர்வுகளை தமிழில் எழுதியவர்களுக்கு பொருந்தாது. மேலும், பள்ளிகளில் நேரடியாக சேராமல் தனித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தமிழ் வழியில் படித்து முடித்தவர்களுக்கு முன்னுரிமை கிடைக்காது.
 
அவர்களுடைய தமிழ் வழியில் கல்வி முடித்ததை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளின் தலைமையாசிரியர்கள் அல்லது கல்வி நிர்வாக அதிகாரிகள் வழங்க வேண்டும்.
 
சமீபத்தில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அனைத்து அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற விதி உத்தரவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ் மொழி பராமரிப்பும், தமிழ்நாட்டின் கல்வி முறையும் சிறப்பாக நிலைநிறுத்தப்படவுள்ளது.
 
Edited by Mahendran