செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (10:07 IST)

முன்பதிவு செய்யாமல் வந்தாலும் தரிசனம்! சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு தரிசனத்திற்கு முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்கு பூஜை சீசன் மிக பிரசித்தி பெற்றது. அந்த சமயத்தில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை போட்டு ஐயப்பன் தரிசனத்திற்கு வருவது வழக்கம்.

 

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நவம்பர் 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. டிசம்பர் 26ல் மண்டல பூஜையும், ஜனவரி 14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. நடப்பு சீசனில் நேரடி முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
 

 

இதனால் நேரடி தரிசன முன்பதிவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என இந்து மத அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து கேரள சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மகர விளக்கு சீசனில் ஆன்லைன் முன்பதிவு செய்யாதோரும் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதனால் ஐயப்ப பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K