செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (13:42 IST)

பா.ஜ.க வென்றதுதான் வேதனையாக உள்ளது.. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!

காங்கிரஸ் கட்சியை வென்றதில் கூட எங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் பாஜக ஒரு தொகுதியில் வென்றது தான் வேதனையாக இருக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. 
 
இதற்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன் 1980 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக ஒரு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எடுப்போது சரியல்ல என்று தெரிவித்தார். 
 
மேலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதோ அல்லது காங்கிரஸ் தன்னை ராஜினாமா செய்யச் சொல்வதோ தன்னை வேதனை படுத்தவில்லை என்றும் ஆனால் கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதுதான் தன்னை வேதனைப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். 
 
Edited by Siva