டெல்டா வைரஸிடம் தோற்கும் தடுப்பூசிகள்!? – அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் அவற்றின் எதிர்ப்பு திறன் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளின் செயல்திறன் டெல்டா வைரஸுக்கு எதிராக மிகவும் குறைந்துள்ளதாக தெரிய வந்தது.
அதை தொடர்ந்து இந்தியாவிலும் தடுப்பூசிகளின் திறன் டெல்டா வைரஸுக்கு எதிராக குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டின் தடுப்பு திறன் முதல் டோஸ் 82 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 48 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், இரண்டாவது டோஸ் 92 சதவீதத்திலிருந்து 25% ஆக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.