1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:07 IST)

பி வி சிந்துவை அழைத்து விருந்து வைத்த மெகா ஸ்டார்!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி வி சிந்துவை அழைத்து தன் வீட்டில் விருந்து வைத்துள்ளார் சிரஞ்சீவி.

ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபராக இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியராக சாதனைப் படைத்துள்ளார் பி வி சிந்து. ரியோ மற்றும் டோக்யோ என இரு தொடர்களிலும் பதக்கம் வென்ற அவரைப் பாராட்டும் விதமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் அவரை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த விருதில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணிக் கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.