1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 14 மார்ச் 2020 (18:04 IST)

கொரோனா வைரஸ் பாதித்த 5 பேர் தப்பி ஓட்டம் !

கொரோனா வைரஸ் பாதிப்பு: 5 பேர் தப்பி ஓட்டம்

கொரோனா வைரஸுக்கு எதிராக உறுதியுடன் கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில், கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் நாக்பூர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர்.
 
உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ( ஆர் எம் எஸ் மருத்துவமனையில் ) ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். இதற்கு முன்னர் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.
 
இந்தியாவில்  நேற்று மாலை வரை கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் நாக்பூர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர்.
 
கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயத்தால்,  மும்பை, தானே, நவி மும்பை, புனே, பிம்ப்ரி சின்ச்வாட், நாக்பூர், நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள்,ஆடிட்டோரியங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களை மூடும்படி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் தப்பி சென்றனர். பின்னர் போலீஸாரால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
 
மேலும் ,நாக்பூரில் பயோ பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து 5 பேர் தப்பி சென்றுள்ளனர். இதில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் மற்ற 4 பேரின் அறிக்கைகள் வரவில்லை என  போலீஸார் தெரிவித்துள்ளனர்.