திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 டிசம்பர் 2022 (19:57 IST)

அடுத்த 40 நாள்களில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும்: அதிர்ச்சித் தகவல்!

corona
அடுத்த 40 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
 
சீனாவை அடுத்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருக்கும் என்றும் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமாக ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 சீனா ஜப்பான் தென் கொரியா ஹாங்காங் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதாகவும் அடுத்தது இந்தியாதான் என்றும் எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து வந்த 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva