செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:52 IST)

கொரோனா தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு!

vaccine
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதை நிறுத்திவிட்டோம் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
கொரோனா தடுப்பூசி மருந்து விற்பனை செய்யாமல் வீணாவதை தவிர்க்க உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசி 600 ரூபாயிலிருந்து 225 ரூபாய் என குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போது 20 கோடியை தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் எனவே தான் தயாரிப்பை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்