1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:07 IST)

Covid XE in Kollam? கேரளாவில் முடுக்கிவிடப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கை!

Covid XE in Kollam? கேரளாவில் முடுக்கிவிடப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கை!
கேரளாவில் இளைஞருக்கு ஏற்பட்ட தொற்று கொரோனா எக்ஸ் இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான எக்ஸ் இ என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது.
 
மகாராஷ்டிராவில் எக்ஸ்இ வகை கொரோனா? 
மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் எக்ஸ்இ வகை கொரோனா கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் உறுதி செய்யப்பட்டது எக்ஸ் இ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Covid XE in Kollam? கேரளாவில் முடுக்கிவிடப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கை!
தமிழகத்தின் நிலை என்ன? 
இதுகுறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மும்பையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட வைரஸ் வகை எக்ஸ் இ இல்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் அந்த வைரஸ் எங்கும் பரவவில்லை என கூறியுள்ளார். 
 
கடந்த சில தினங்களாக சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Covid XE in Kollam? கேரளாவில் முடுக்கிவிடப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கை!
கேரளாவில் கொரோனா எக்ஸ் இ தொற்று: 
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த வகை தொற்று கொரோனா எக்ஸ் இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
இதனால் கேரளாவில் கொரோனா எக்ஸ் இ பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.