திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (21:08 IST)

கொரொனா பயத்தால் ரூ. 25 ஆயிரத்தை எடுக்காத மக்கள்...

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சா என்பவர் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்துள்ளார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.25 ஆயிரம் பணக்கட்டு கீழே விழுந்துள்ளது.

ஆனால் அதை அவர் பார்க்காமல் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பொருள்களை வாங்கிவிட்டு பணத்தை எடுக்கலாம்  என நினைத்து பாக்கெட்டில் பார்த்தபோது பணம் இல்லை.பின்னர், மக்கள் கொரோனா காரணமாக அந்தப் பணத்தை எடுக்காமல் விட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உரிய பாதுகாப்பு முறையுடன் பணத்தை எடுத்து சென்றூள்ளனர். பின்னர் கஜேந்திர சாவிடம் விசாரித்து அவருடைய என்பதை உருதி செய்தபின் அந்தப் பணத்தை ஒப்படைத்துள்ளனர்