திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2020 (17:45 IST)

மக்களின் இன்னலை நினைத்து என்னால் தூங்கமுடியவில்லை – ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்!!

இந்தியாவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது, இன்ஸ்டா கிராம் பக்கத்தில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நீல் மோர்கனுடன் நேரலையில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், கொரொனாவால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவது குறித்து வேதனை தெரிவித்தார்.

மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் , பட்டிணி கிடக்கின்ற ஏழை எளிய மக்களின் அவல நிலையை நினைத்து என்னால் நன்றாக  உறங்க முடியவில்லை என தனது கருத்தை மனம்விட்டு தெரிவித்துள்ளார்.