1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 மே 2021 (08:52 IST)

3.30 லட்ச மரணங்கள்: இந்தியாவில் கொரோனா ஓலம்!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் உலகில் உள்ள ஏனைய நாடுகளை விட அதிகமாக உள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,751,681ஆக அதிகரித்துள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 3,30,751 என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குணமானோர் எண்ணிக்கை 23,720,919 என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் உலகில் உள்ள ஏனைய நாடுகளை விட அதாவது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட அதிகமாக உள்ளது.