திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (08:43 IST)

கொரோனா விழிப்புணர்வு செய்தி வெளியிட்டாரா கவுண்டமணி?

நடிகர் கவுண்டமணி பெயரில் டிவிட்டரில் கொரோனா விழிப்புணர்வு செய்தி ஒன்று வெளியாகி இருப்பது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

நடிகர் கவுண்டமணி தான் உச்ச நட்சத்திரமாக இருந்த போதும் சரி, அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகியபோதும் சரி பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்ட மாட்டார். அதுபோல ஊடகங்களுக்கும் பேட்டி தரமாட்டார். இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வரும் நிலையில் கவுண்டமணி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘கோவிட் ஒரு சாதாரண தொற்று அல்ல.எனக்கு முன்னாள் மக்கள் இறப்பதை பார்க்கிறேன். தயவு செய்து உள்ளே தங்கி, தடுப்பூசி அல்லது வேறு ஏதேனும் அவசர நிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்.’ எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது உண்மையிலேயே கவுண்டமனி டிவிட்டர் கணக்குதானா என்பது தெரியவில்லை.