1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 6.60 traveled in two days before lock down

நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் !

TN Lockdown
சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்தது. மேலும் இன்று முதல் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் தளர்வுகள் எதுவும் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
எனவே, சனி மற்றும் ஞாயிறு ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதில் குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 65,746 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என தமிழக போக்குவரத்துத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
குழந்தைகளுக்கும் கோவாக்சின் - பரிசோதனை விரைவில் துவக்கம்!