புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (09:38 IST)

இரண்டு டோஸ் பத்தாது?? பூஸ்டர் தடுப்பூசி…! – இந்தியாவில் விரைவில் சோதனை!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி ஒன்றை சோதனை செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பயலாஜிக்கல் இ என்ற நிறுவனம் கோர்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.

இந்த தடுப்பூசியை ஏற்கனவே கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டராக செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. பல நாடுகளில் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவதால் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டி இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனைக்கு இந்திய தலைமை மருத்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு இந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.