1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:11 IST)

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: வெளிநாட்டில் இருந்து சோனியா காந்தி அறிவிப்பு!

congress
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்றுள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடு சென்றிருப்பதால் வெளிநாட்டில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கூட்டத்தில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றும் அக்டோபர் 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுப்பலகை