1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (20:20 IST)

மாணவர் சங்க தேர்தல் :காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவர்கள் !

rajasthan
ராஜஷ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள கல்லூரி மாணவர் சங்க தேர்தலுக்கு மாணவர்கள், சக மாணவர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

கடந்த 2020 ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவிய நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் அவர்களுக்கு பாடம் கற்பிகப்பட்டது.

இந்த  நிலையில் சமீபத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன.  கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் மா நில கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பாடாத நிலையில்,  தற்போது அனுமதி அளித்துள்ளது.

எனவே, ஜெய்பூரிலுள்ள பிரபல கல்லூரியில் படித்து வரும் மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள், சக மாணவ, மாணவிகளில் கால்களில் விழுந்து ஓட்டுப் போடும் படி கேட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.