ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (15:47 IST)

10 ஆண்டுகளாக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத 2 மாநிலங்கள்.. காங்கிரஸ் கட்சியின் பரிதாபம்..!

இந்தியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்ற தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் இரண்டு முக்கிய மாநிலங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு லோக்சபா தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது

கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றும் இந்த முறை ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் ஒரு சில தொகுதிகளை வெற்றி பெற வாய்ப்பு என்றும் நம்பப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் குஜராத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் நடந்தால் 15 ஆண்டுகளாக குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran