வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (15:49 IST)

பேசி மயக்கும் சிவகுமார்: ஜகா வாங்கும் ஏம்.எல்.ஏ-க்கள்: பாஜக டோட்டலி அப்செட்!

கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ அதனை வாபஸ் வாங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் பொருட்டு 16 எம்.எல்.ஏக்கள் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
 
கர்நாடகவில் காங்கிரஸ் - மஜத ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில் ராஜினாமா கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ நாகராஜை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் நாகராஜ் கூறியதாவது, ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவ்வாறு முடிவெடுதேன். தற்போது டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தியதால் அதுகுறித்து பரிசீலிக்க உள்ளேன். 
 
தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவது குறித்து மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏவான சுதாகர் ராவுடன் ஆலோசித்து அதன் பின்னர் என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 
இது காங்கிரஸ் - மஜத தரப்பிற்கு சாதகமான பதிலாக பார்க்கப்படுகிறது. இதனால், கார்நாடக பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.