திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (14:55 IST)

மன்னர்கள், ராணிகளின் கட்சி தான் காங்கிரஸ்: அமித்ஷா

Amitshah
காங்கிரஸ் கட்சி மன்னர்கள் மற்றும் ராணியின் கட்சி என்றும் பாஜகதான் பொதுமக்களின் கட்சி என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
 
இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியபோது காங்கிரஸ் கட்சியில்  முதலமைச்சராக வேண்டும் என்றால் நீங்கள் மன்னர் அல்லது ராணியின் மகன் அல்லது மகளாக  இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மன்னர்கள் மற்றும் ராணியின் கட்சி என்றும் தெரிவித்தார் 
 
இமாச்சல பிரதேச மாநிலத்தில் செய்த வளர்ச்சி பணிகளை பாஜகவால் கணக்கு காட்ட முடியும் என்றும் ஆனால் எவ்வளவு நாள் ஆட்சி செய்தோம் என்பதை கூட காங்கிரஸ் கட்சியால் கணக்கு காட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran