வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (08:25 IST)

இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.209 உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் என்பதும் சிலிண்டர் விலையில் ஏற்ற இறக்கம் இருப்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று  வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூபாய் 203 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 இதுவரை சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூபாய் 1695 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரூபாய் 1898 என விற்பனை ஆகிறது.  இதனால் இன்று முதல் ரூபாய் 203 உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.918 என விற்பனை ஆவதால் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva