மதுபான விற்பனைக்கு தடைவிதித்த முதல்வர் யோகி ஆதித்ய நாத்
உத்தபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
அயோத்தியில் அமையவுள்ள ராமல் கோயிலின் கருவறைக்கு இன்று முதல்வர் ஆதித்ய நாத் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பேசிய அவர், அயோத்தி ராமல் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியைச் சுற்றி உள்ள பகுதிகளில் மதுவிற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றும், ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
அதன்படி, மதுராவைச் சுற்றிலும் இருந்த 37 மதுபானக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. இதை மக்கள் வரவேற்றுள்ளனர்.