செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (13:33 IST)

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சென்னையில் இருந்து கிளம்புகிறதா?

மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற பாஜக, சமீபத்தில் ஒருசில குறிப்பிட்ட மார்க்கங்களில் தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தது தெரிந்ததே. ரயில்வே துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைய விடுவது பெரும் ஆபத்து என ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் முதல்கட்டமாக 500 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் தனியார் ரயில்கள் விடப்படும் என தெரிகிறது
 
குறிப்பாக சென்னை-பெங்களூர் இடையே தனியார் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த வழிப்பாதைதான் தனியார் ரயில் இயங்கும் முதல் ரயில் பாதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் டெல்லி - லக்னோ, மும்பை - ஷீரடி, திருவனந்தபுரம் - கண்ணுர், மும்பை- அகமதாபாத் மார்க்கங்களை தனியார் வசம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மார்க்கங்களுக்கான ஏலம் விரைவில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் 23 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதும் ரயில் நிலையங்களில் மால், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது