ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (22:12 IST)

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி

சென்னையின் வரப்பிரசாதங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் தற்போது சென்னை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கட்டணம் சிறிது அதிகமாக இருந்தாலும் குளுகுளு பயணம், குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு சென்றடைவது, பார்க்கிங் வசதி, ஆட்டோ வசதி என பல சிறப்பு அம்சங்கள் இந்த மெட்ரோ ரயிலில் உள்ளது.
 
இந்த நிலையில் உயர் மின் அழுத்த கோளாறு காரணமாக விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு கொடுப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
உயர் மின் அழுத்த கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் மெட்ரோ ரயில் கூடிய விரைவில் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நாளை காலைக்குள் உயர் மின் அழுத்த கோளாறு சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது