வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (15:40 IST)

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: நிதித்துறையை இழக்கின்றாரா நிர்மலா சீதாராமன்?

வரும் பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் குறிப்பாக நிர்மலா சீதாராமனின் நிதித்துறையில் மாற்றம் இருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
 
சமீபத்தில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை உள்பட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் கூடவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டம் முடிவடைந்ததும் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
குறிப்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த பதவியிலிருந்து அவர் மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சராக பொறுப்பேற்று யார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக மற்றும் பாமகவுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது