புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:14 IST)

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: வெளிநாடுகள் மீது பழியை தூக்கி போட்ட அமைச்சர்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

 
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆம், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.85ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையு லிட்டருக்கு ரூ.80.67 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கொரோனா பொது முடக்கம் காரணமாக எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை குறைத்துள்ளது. 
 
சில மாதங்களுக்கு முன் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 35 டாலராக இருந்த நிலையில் தற்போது விலை 55 டாலராக அதிகரித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% அளவுக்கு வெளிநாடுகளையே சார்ந்திருப்பதால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.