திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:16 IST)

அதிகரிக்கும் கொரோனா; ஆபத்தில் 46 மாவட்டங்கள்! – மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மாதம் தொடக்கம் வரை கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தை அடைந்திருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளால் குறைய தொடங்கியது. இந்நிலையில் தற்போது பல முக்கிய நகரங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கியமான 46 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.