செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (13:57 IST)

ரயில்களில் புகைப்பிடித்தால், பிச்சையெடுத்தால் வழக்கு கிடையாது! – விதியில் புதிய மாற்றம்?

ரயில்களில் புகைப்பிடிப்பது மற்றும் பிச்சையெடுப்பது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றம் என்ற பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வேயில் ரயில்களில் பிச்சை எடுப்பது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை வழக்கு பதியும் வகையிலான குற்றமாக உள்ளது. ரயில்களில் பிச்சை எடுத்தால் இரண்டாயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை, அதேபோல புகைப்பிடித்தாலும் அபராதம் அல்லது சிறை தண்டனை உண்டு.

இந்நிலையில் ரயில்களில் பிச்சையெடுத்தல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் மட்டும் வசூல் செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதன்மூலம் பிச்சையெடுப்பதையோ, புகைப்பிடிப்பதையோ அரசு ஊக்குவிக்கவில்லை என்றும், வழக்குப்பதியும் அளவிலான குற்றமாக அதை கருதாமல் அபராதம் விதிக்கும் வகையிலான குற்றமாக மாற்ற மட்டுமே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.