செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:38 IST)

கொரோனா தடுப்பூசி விலை குறைக்கப்படுமா? மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் விலையேற்றம் அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசியின் விலையை பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் ஆகியவை 400 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் இரு நிறுவனங்களையும் விலையைக் குறைக்க சொல்லி மத்திய மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.