1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (06:43 IST)

கோவிஷீல்டை அடுத்து கோவாக்சின் தடுப்பூசியும் விலையேற்றம்: ஒரு டோஸ் ரூ.600

கோவிஷீல்டை அடுத்து கோவாக்சின் தடுப்பூசியும் விலையேற்றம்: ஒரு டோஸ் ரூ.600
இந்தியாவில் கொரொனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் கோரனோ வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன
 
மாநில அரசுகள் சார்பில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன என்பதும் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசிக்கு கட்டணம் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தற்போது கோவாக்சின் தடுப்பூசியும் விலையை ஏற்றி உள்ளது என்று அறிவித்துள்ளது
 
கோவாக்சின் தடுப்பூசி விலையை அதிகரித்து பயோடெக் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது/ அந்த அறிவிப்பில் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் விலை ரூபாய் 600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தனியார் மருத்துவமனைக்கு ஒரு டோஸ் விலை ரூபாய் 1,200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்ந்துள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது