Daily Horoscope
✕

மருந்துகளில் QR Code!.. போலிகளை தடுக்க மத்திய அரசு அதிரடி!...

Updated: வெள்ளி, 26 ஜூன் 2026 (11:54 IST)
மக்களின் உயிரை பாதுகாக்கும் மருத்துவத் துறையில் பல மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக பலரும் போலி மருந்துகளை தயாரித்து புழக்கத்தில் விட்டு விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட போலி இருமல் மருந்தை உட்கொண்ட சில குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்துதான் மருத்துவரின் சீட்/பரீசலனை இல்லாமல் இருமல் மருந்து கொடுக்கக்கூடாது என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அவை மருந்து கடைகளில் கடைபிடிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. இந்நிலையில்தான் போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதை பொருட்கள், மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மை பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியிருக்கிறது..

QR Code ஸ்கேன் செய்தால் மருந்தின் விவரங்களை பொதுமக்களை சரி பார்த்துக் கொள்ள முடியும். 2027 ஜூன் ஜூலை 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரவிருக்கிறது.
இதன் மூலம் போலி மருந்துகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது...<>

எல்லாம் காட்டு

1000 வாக்குகள் கூட வாங்காத கம்யூனிஸ்ட் கட்சிகள்!.. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அப்டேட்!..

சீமானுக்கு தொடர்ந்து முட்டைதானா?!.. 4வது இடத்திற்கு போன நாம் தமிழர் கட்சி!..

10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை!.. தவெகவினர் கொண்டாட்டம்!..

பினராயி விஜயன் மற்றும் மகள், மருமகன் மீது வழக்கு தொடர அனுமதி.. கேரள ஐகோர்ட் உத்தரவு..

மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக வெற்றி முகம்.. தமிழகத்தில் தவெக தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments