அமெரிக்காவில் ஒரு லட்சம்.. இந்தியாவில் 2 ஆயிரம்!.. மருந்து மோசடி அம்பலம்!..
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வெளிநாட்டு விலையை ஒப்பிட்டால் கண்டிப்பாக அந்த பொருளின் விலை இந்தியாவில் குறைவாகவே இருக்கும். இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் பொருள் கூட அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும்.
இந்நிலையில்தான், அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா என்கிற பெண் அமெரிக்காவில் வெறும் 6 மாத்திரைகளுக்கு ரூ.95,000 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், காப்பீடு நிறுவனம் அந்த செலவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். கனடாவை சேர்ந்த மருந்தகம் மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே மருந்தை வெறும் ரூ.2300க்கு வாங்கியதாக கூறியுள்ள அவர் அமெரிக்காவின் சுகாதார அமைப்பு ஒரு பெரும் ஸ்கேம் எனவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவர் சமூக விரதங்களில் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் அமெரிக்காவில் அதிக மருத்துவ செலவு மற்றும் காப்பீடு குறைபாடுகள் குறித்து விவாதங்கள் ஏற்பட்டிருக்கிறது. மேலும் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் இந்தியாவை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்