புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:42 IST)

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50சதவீத பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் முழுவதும் பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 1 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.