குகையில் வாழும் சாமியார் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை
60 ஆண்டுகளாக குகையில் வாழும் சாமியார் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1 கோடி நன்கொடை கொடுத்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்தது. இதற்கான அடிக்கல்நாட்டுவிழா கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இக்கோயில் சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்கள் உடைய பிரமாண்டமான கட்டப்பட்டவுள்ளது.
இக்கோயிலைக் கட்டுவதற்கான நிதிதிரட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பவர்ஸ்டர் நிதி கொடுத்தார். ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் இதற்கான நிதி கொடுத்துள்ளானர். இந்நிலையில் தற்போது 60 ஆண்டுகளாக குகையில் வசித்துவரும் 83 வயதான குகைசாமியார் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குகைசாமியார் காசோலை மூலம் இத்தொகையை வழங்கினார்.