1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (11:58 IST)

மத்திய பட்ஜெட்டா? ஆந்திரா, பீகார் நலன் பட்ஜெட்டா? பொருளாதார நிபுணர்கள் கேள்வி..!

மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டின் அம்சங்களை படித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இது மத்திய பட்ஜெட்டா? அல்லது ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்டா? என பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மத்திய அரசு அமைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகிய இருவரும் பெரும் உதவி செய்த நிலையில், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கும் ஏராளமான சலுகைகள் வாரி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டமான பொலாவரம் நீர் பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக 15,000  கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பீகார் மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்க 26 ஆயிரம் கோடி, பீகாரில் புதிய விமான நிலையம், மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறுகையில் இந்த பட்ஜெட் உள்ள அம்சங்களை பார்க்கும்போது இது மத்திய அரசின் பட்ஜெட் போல் தெரியவில்லை, ஆந்திரா பீகார் மாநில பட்ஜெட் போல் தெரிகிறது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva