வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (12:36 IST)

Budget 2024 Live Updates: மத்திய பட்ஜெட் 2024 நேரலை!

Union Budget 2024

Union Budget 2024: Key Highlights! மத்திய பட்ஜெட் 2024-25 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டின் சிறப்பு அறிவிப்புகள், முக்கிய திட்டங்கள், வரிச்சலுகைகள் குறித்த நேரலை அப்டேட்

ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.

ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி
ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி
ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீதம் வரி
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதம் வரி
ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்திற்கு 30 சதவீதம் வரி


நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-term capital gains tax) 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு!

வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைப்பு

தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலும் நீக்கப்படுகிறது.

தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக அதிகரிப்பு

தாமதமான வருமான வரி தாக்கல் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

ப்ளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைப்பு

தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%-ல் இருந்து 6% ஆக குறைப்பு!

3 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நாட்டில் விண்வெளி சார்ந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் செல்போன்கள் விலை குறைய வாய்ப்பு.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம், அசாம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேச மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி சிறப்பு நிதி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மறுப்பு. தமிழக எம்.பிக்கள் அமளி

உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு மாநில அரசுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9 சதவீதமாக குறையும் என கணிப்பு. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடி

2024-24 நிதியாண்டுக்கான மூலதன செலவினத்துக்கு ₹11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

1 கோடி வீடுகளில் சூரிய மின்சார தகடுகள் அமைக்க ஏற்பாடு

ரூ.11,500 கோடி செலவில் பீகாரில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திலும் பீகாருக்கு நிதி ஒதுக்கீடு

பீகாரில் உள்ள நாளத்தா பகுதியை சுற்றுலா மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கீடு. பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி உள்ளிட்ட ஆலயங்களை மேம்படுத்த சிறப்பு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

சிறிய அணுமின் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்

அனைவருக்கும் வீட்டு வசதிக்கான PM-Awas Yojana Urban 2.0

PMAY-U திட்டத்தின் கீழ் நகர்புற வீட்டுத்திட்டங்களுக்கு ரூ.2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் வட்டி மானியம் தொடர்ந்து அளிக்கப்படும். பெண் உரிமையாளர்களுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.

தொழில் பயிற்சி திட்ட பழகுநர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை. இந்தியாவில் உள்ள டாப் 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் இண்டெர்ன்ஷிப் பயிற்சி.

பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து பிரிவு வளர்ச்சிக்காக பூர்வோதயா திட்டம்

வடகிழக்கு மாகாணங்களில் 100க்கும் அதிகமான இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் கிளைகள் அமைக்கப்படும்.

மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

முத்ரா கடன் உதவி தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 

நாடு முழுவதும் 3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.

நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

தொழிலாளர்களுக்கான தங்கும் வசதிகள் அரசு, தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும்.

தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்.

அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 வரை வைப்புநிதி சந்தாவை அரசே செலுத்தும்.

உற்பத்தி துறையில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி வரை கடன் உத்தரவாதம். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நெருக்கடி காலங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவ சிறப்பு நிதி திட்டம்.

5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்

உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக்கடன் வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். 1 லட்சம் மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதற்கான மின்னணு ரசீது வழங்கப்படும்

மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கடன் உதவியை ஸ்கில் லோன் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும்

1000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்

உற்பத்தி துறையில் வேலை உருவாக்கத்திற்கான இத்திட்டத்தில் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவர்

பணிபுரியும் பெண்களுக்காக மத்திய அரசின் சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்

பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்க கூடுதல் சிறப்பு நிதி. நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26 ஆயிரம் நிதி ஒதுக்கீடு

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும். ஆந்திர தலைநகர் அமராவதியை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. நதிநீர், சாலை மேம்பாடு பணிகளுக்கு கூடுதல் நிதி.

சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி

உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்

ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

வேளாண்துறை வளர்ச்சிக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்

நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்.

அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம். 

அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ₹2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது

2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பெண்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 7-வது முறையாக தொடர்ந்து மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்குவார்.

மத்திய அரசின் பட்ஜெட்டுடன், ஜம்மு காஷ்மீர் யூனியனுக்கான பட்ஜெட்டும் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டினார்
 

Nirmala