Daily Horoscope
✕

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகள் ரத்து -பிரதமர் மோடி

Written By Sinoj
Updated: செவ்வாய், 1 ஜூன் 2021 (19:59 IST)
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களில் கொரொனாவைத் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் பள்ளிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

எனவே  சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து  செய்வதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும், இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: கொரொனா சூழலில் மாணவர்களின் நலன் அடிப்படையில் சிபிஎஸ் இ பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments