Daily Horoscope

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

Written By Mahendran
Updated: சனி, 15 பிப்ரவரி 2025 (10:57 IST)
சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.
 
சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து, வரலாற்றில் முதல் முறையாக 86 நாட்களுக்கு முன்னதாகவே பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு தொடங்கியுள்ளது. 7842  மையங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வை வெளிநாடுகளிலும் சில மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதால் 26 தேர்வு மையங்கள் வெளிநாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் 40 நாட்களும், 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் இரண்டு மாதங்கள் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் மார்ச் 18ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளும், ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
 
பத்தாம் வகுப்பில் 84 பாடப்பிரிவுகளிலும், 12ஆம் வகுப்பில் 120 பாடப்பிரிவுகளிலும் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக 86 நாட்களுக்கு முன்னதாக பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments